போர்களில் உயிர்நீத்த தனது மூதாதையர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மன்னன் ராஜ ராஜ சோழன் !!!! இந்த படத்தில் உள்ள சிற்பம் கும்பகோணம் அருகே உள்ள திருவிசைநல்லூர் கற்கடேஸ்வரர்.கோவிலில் உள்ளது . போர்களில் உயிர்நீத்த தனது மூதாதையர்களுக்கு ராஜ ராஜ சோழன் அஞ்சலி செலுத்துவது போல் ஒரு சிற்பம் உள்ளது அவருடன் அவருடைய குரு கருவூர் தேவர் மற்றும் மனைவிகள் உள்ளனர் சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் "வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு, மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் " என்றும், இறைவன் பெயர் "திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர் " எனவும் குறிக்கப்படுகிறது. இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில், விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும், அபிஷேகத்திற்கு நிலம் விட்ட செய்தியையும், காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன. இராசேந்திரன் காலக் கல்வெட்டில், அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும், அவன் மனைவியான அரசி, சுவாமிக்கு தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது. சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய 'திருவுந்தியார் ' பாடிய 'திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் ' அவதரித்த இடம் இந்த திருவிசையனல்லூர்
No comments:
Post a Comment